Wednesday, 6 December 2023

உங்களிடம் சூரியன் ஆதிக்கம் உள்ளதா?

ஒரு மனிதனின் பிறப்பு என்பது குறிப்பிட நாளில் நிகழ்வதும் அவனின் நாம எழுத்தாக குறிப்பிட்ட பெயர்கள் அமைவதும்  நம் விருப்பத்தின்படி அமைவது அல்ல....
 அது பிரபஞ்சம்  என்னும் இறைவனால் நமக்கு  கொடுக்கப்பட்டிருக்கும்  நம் விதியை சொல்லும் ஒரு முன்னோட்டமே!

 ஒவ்வொரு மனிதனின் பெயரை கொண்டும் அவன் பிறந்த தேதிகளுக்குள்ளும் 
அந்த பெயர் எண்களின் கூட்டத்தொகைகுள்ளும் அவனது வாழ்வியல் ரகசியங்கள் ஒளிந்திருக்கிறது ....

  அதனை  தெளிவாக அவனது ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரகங்கள் நமக்கு உணர்த்தும் ..

ஒரு மனிதனுடைய ஜாதகத்தை பார்க்காமலேயே அவருடைய பெயரின் முதல் எழுத்துக்கள் மற்றும் அவர் பிறந்த தேதி மாதம் வருடம் இவற்றைக் கூட்டி வரக்கூடிய எண்  அல்லது அவர் பெயரின் முதல் எழுத்து இவற்றைக் கொண்டு அந்த மனிதனுடைய வாழ்வியல் விஷயங்களை நாம் எளிதாக சொல்லிவிடலாம் ...

அந்த வகையில் நாம் இன்று காண இருப்பது சூரியனின் ஆதிக்கம் யாருக்கெல்லாம் இருக்கும் இவர்களின் ஜாதகத்தில் எவ்வாறு சூரியன் அமைப்பு முதன்மையாக இருக்கிறது இவர்கள் வெற்றி பெற என்ன விதமான செயல்கள் செய்ய வேண்டும்
 எந்த விதமான நோய்களால் அவர்கள் பாதிக்கப்படுபவர்கள் எந்த விதமான பரிகாரங்கள் செய்வதன் மூலம் அவர் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம் என்பதை பற்றி இன்றைய கட்டுரையில் காண்போம்...

 ஒரு மனிதனுடைய அவருடைய பெயரின் முதல் எழுத்துக்கள் A I J K   Y  அல்லது இதனுடைய பிறந்த தேதி 1 10 19  எனில் அல்லது இவரின் பிறந்த தேதி மாதம் வருடம் இவற்றை மூன்றையும் கூட்டி வரக்கூடிய தொகை 1 எனில் அல்லது இவரின் பெயரின் எழுத்துக்களை கூட்டி வரக் கூடிய தொகை 1 எனில் இவர் முழுவதும் சூரியனின் ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய நபராக இருப்பார்....

  நேர்மை நாணயம் அதிகாரம் இவைகள் நிறைந்த நபராக இவர்கள் இருக்கிறார்கள் சுதந்திரமான எண்ணம் கொண்ட இவர்கள்
எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவராகவும் தன் எண்ணங்களை செயலாற்றி  காட்டக்கூடிய திறமை கொண்டவராகவும் இருக்கிறார்கள் 

இவர்கள் ஜாதகத்தில் சூரியன் என்ற கிரகம் முதன்மை கிரகமாக  அந்த ஜாதகத்தை ஆளும் கிரகமாக அமைந்திருக்கும் ...
அதாவது  இவர்களின் சுய ஜாதகத்தில் சூரியன் லக்னத்தில் இருக்கும் அல்லது  லக்னாதிபதியுடன் இருக்கும்...
பரிவர்த்தனை பார்வை இப்படி ஏதேனும் ஒரு வகையில் லக்னம் லக்னாதிபதியை தொடர்பு கொண்டிருக்கும் மேலும் இவர்கள் சிம்மராசி சிம்ம லக்னம்  உத்திராடம் கிருத்திகை உத்திரம்  போன்ற நட்சத்திர ராசி லக்னங்கள் பிறந்தவர்களாகவும் இருப்பார்கள் ...
வணிசை பவ கரணத்தில்  பெரும்பாலும் இவர்கள் பிறக்கிறார்கள் ...
மிஸ் பண்ண ஜாதக அமைப்புகளில் ஏதேனும் ஒன்றின்  தொடர்பு நிச்சயம் இருக்கும்

  இவர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள் மற்றவர்களை அதிகாரம் செலுத்துவதிலும் அரவணைப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே...

 வஞ்சகம் துரோகம் ரகசியம் போன்ற கெட்ட எண்ணங்கள் ஏதும் தனுடன் வைத்துக் கொள்ளாமல் எதனையும் தைரியமாக வெளிப்படையாக செய்யக்கூடிய நபராக இவர்கள் இருப்பார்கள்....

 தான் மற்றவரை சென்று நாடாமல் தன்னைமற்றவர் நாடி வரவேண்டும் என்ற எண்ணமும் உள்ளவர்கள்...

 பிரபலமாகவும் பிரகாசமாகவும் கம்பீரமாகவும் வாழ வேண்டும் என்பதை இவர் வாழ்வில் நோக்கமாக இருக்கும் அதற்கு ஏற்பவே இவர்களின் வாழ்வியல் நடைமுறைகள் இருக்கும்...

தன்னைச் சுற்றி உள்ளவர்களின் நிலையறிந்து ஓடிச் சென்று உதவுவதில் முதல் நபராக இருக்கும் இவர்கள் பெரும்பாலும் மற்றவர் உதவியை நாடுவது இல்லை.... சோம்பேறிகள் தான் இருந்தாலும் அவர்கள் மற்றவர்களை திறமையாக வேலை வாங்கக்கூடிய அமைப்பை கொண்டவர்கள்..

 மருத்துவம் அதிகாரம்   அரசு சார்ந்த தொழில்கள் நிறுவனங்கள் பரம்பரையாக செய்து  வரும் தொழில்கள் போன்ற அமைப்புகளில் இவர்களின் உத்தியோகம்  அமைகிறது அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள் இவர்கள் ...

இவர்கள் வீட்டில் அரசு பணியாற்றும் நபர் அல்லது அரசியலில் இருக்கக்கூடியவர்  நிச்சயம் இருப்பவர்கள்

 இவர்களுக்கு வரக்கூடிய நோய்களாக ஒற்றைதலைவலி முதுகுத்தண்டு சார்ந்த பிரச்சனைகள் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வலது கண் பாதிப்பு அடைதல்  எலும்பு தொடர்பான வியாதிகளால் இவர்கள் 40 வயதுக்கு மேல்  அவதிப்படுகிறார்கள்....
சூரியனின் ஆளுமையை பெற்ற இவர்கள் அனுதினமும் சூரியனை 6 மணியிலிருந்து ஏழு மணிக்குள்  சூரிய நமஸ்காரம்
செய்து வருதல் வேண்டும்.
அசைவ உணவுகளை தவிர்த்து பிரதோஷ வழிபாடுகளை சிறப்பாக இவர்கள் மேற்கொள்ள வேண்டும் வயதில் மூத்தவர்கள்  தந்தையிடன் கருத்து வேறுபாடுகள் கொண்டு அவர்களை பகைக்க கூடாது அரசு உயர் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் 
அரசு சார்ந்த ஆவணம் சார்ந்த தவறுகள் ஏதும் செய்யாமல் தான் செய்யும் தொழில் நேர்மையை கடைப்பிடித்தாலே இவர்களின் வெற்றியின் உயரம் அளப்பரியதாக இருக்கும்...

 வாழ்வின் வெளிச்சம் இவர்களை வந்தடையும்
வணக்கம் 🙏

லக்னாதிபதி ஒவ்வொரு பாவத்தில் நிற்கும்போது ஏற்படக்கூடிய பலன்கள்

லக்னாதிபதி ஒன்றில் நல்ல மனநலம் ஞாபக சக்தி உண்டு மற்றவர்கள் மீதான அலட்சிய பார்வை அதிகம்

லக்னாதிபதி இரண்டில் ஒளிபொருந்திய கண்கள் பேச்சு வன்மை குடும்பப் பற்று மிக்கவர்

லக்னாதிபதி மூன்றில் அல்லல் அலைச்சல் அதிகம் இளைய சகோதர பாசம் உடையவர் பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவர்

லக்னாதிபதி நான்கில் வீடு மனை வாகன யோகம் உண்டு தாய் மீது பற்றுதல் அதிகம் வளர்ப்புப் பிராணிகளின் மீது விருப்பம் அதிகம் உடையவர்

லக்னாதிபதி ஐந்தில் அதிர்ஷ்டம் உண்டு உடல் உழைப்பு இல்லாமலேயே பொருளீட்டும் பாக்கியம் உண்டு காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகம்

லக்னாதிபதி ஏழில் களத்திரம் நண்பர்கள் மீதான ஒட்டுதல் அதிகம்  வாடிக்கையாளர்களை கவர கூடிய ஆற்றல் உண்டு

லக்ன அதிபதி எட்டில் தற்கொலை எண்ணம் தாழ்வு மனப்பான்மை அதிகம் கொண்டவர்கள் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களுக்குப் பிறகு தான் வெற்றி காண முடியும் சில கட்டங்களில் தனிமைப் படுத்தப் படுவர்

லக்னாதிபதி ஒன்பதில்  தந்தை வழி உறவு தந்தை வழி சொத்து சேர்க்கை உண்டு கோவில்குளம் பூர்வ புண்ணிய காரியங்களில் அதிகம் ஈடுபடுவர் தூரதேச பிரயாண வாய்ப்புகள் உண்டு

லக்னாதிபதி பத்தில் வேலை வேலை என்று தொழிலுக்கு ஆகவே ஓட வேண்டிய நிலை ஏற்படலாம் தொழிலை தவிர இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது

தனாதிபதி பதினொன்றில் எதிலும் லாபம்.. லாபம் நோக்கம் அதிகம் உண்டு 
இரட்டை மனநிலை இரட்டை வருமானம் உண்டு

லக்னாதிபதி 12ல் அதிக விரயங்கள் சமாளிக்க வேண்டிவரும் தூக்கம் அதிகம் பூர்வீகத்தை விட்டு சிலருக்கு தொலைவில் இருக்கக்கூடிய நிலையும் ஏற்படலாம்


உங்களிடம் சூரியன் ஆதிக்கம் உள்ளதா?

ஒரு மனிதனின் பிறப்பு என்பது குறிப்பிட நாளில் நிகழ்வதும் அவனின் நாம எழுத்தாக குறிப்பிட்ட பெயர்கள் அமைவதும்  நம் விருப்பத்தின்படி அமைவது அல்ல....